பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அப்படியென்றால் பிராணாயாமம் என்பது ஒரே ஒரு முறைதானோ என்றால் இல்லை. அதில் எட்டு வகை உள்ளன. கொஞ்சங் கொஞ்சமாக அவற்றைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் வாசக அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் விளக்கமாகத் தந்திருக்கிறேன். இந்த முறைகளைப் பின்பற்ற சிறந்த குரு வேண்டும். அவர் காட்டும் வழியில் தான் செய்ய வேண்டும் என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள். மகிழ்ச்சியைப் பெறலாம். எட்டு வகை பிராணாயாமப் பயிற்சிகள் என்றோமே! அவற்றின் பெயர்களும், செய்கிற முறைகளும் பின்வருமாறு. 1. சூரிய பேடா. 2. உஜ்ஜாயி 3. சிட்டாலி 4. சிட்காரி 5. பாஸ்டிரிகா 6. பிரமாரி 7. மர்ச்சகா 8. பிளாவினி என்கிற 8 சுவாச முறைகள் எப்படி செய்யப்படுகின்றன என்பதை இங்கே காண்போம். புரியாத பெயர் புரிந்து கொண்டால் ரசிக்கும்படி இருக்கும். 1. GifluuGLILIT (Suryabeda) ஒவ்வொரு முறையும், மூக்கின் வலது புறமாக மூச்சிழுத்து (பிங்கல) இடதுபுறமாக வெளியேவிடும் முறை (இடகலை) 2. 2. čgagssuol (Ujjayi) வாயை நன்றாக மூடிக்கொண்டு இரண்டு மூக்குத் துவாரத்தாலும் காற்றை உள்ளேயிழுத்து பிறகு காற்றை இடது மூக்கின் வழியாக வெளியே விடும் முறை. இப்படி மூச்சை வெளியே விடுகிறபோது உள் நாவை அரைபாதி அடைத்தபடி, ஒரு வித ஒலி எழுப்பியபடி செய்ய வேண்டும் இப்படி செய்கிறபோது தொண்டையிலும் மூக்கிலும் உள்ள சளி போன்ற அடைப்பை விடுவித்து சரி செய்து ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிற ஆக்க சக்தி அதிகரிக்கிறது. ël’ LITsūl (Shitali) வாயின் வழியாக மூச்சை உள்ளே இழுத்து மூக்கின் இரு துவாரங்கள் வழியாக காற்றை வெளியே விடும் முறை இது.