பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


7. unii&&sm (Murchaha) காற்றை உள்ளே இருத்தி வைக்கிற கும்பக நிலையிலும், தாற்றை வெளியே விடுகிற இரேசக நிலையின் போதும், ஜலந்தரபந்தா என்ற இருக்கையில் இருந்து செயல்படுகிற சுவாச முறை இது. ஜலந்தரா பந்தா என்றால் இருக்கை (Posture) என்பது முகத்தின் தாழ்வாயானது (Chin) தொண்டைக் குழி மீது தொடர்பு கொண்டிருப்பது போல இருத்தி வைத்திருக்கும் முறையாகும். 8. L'îl6TIT6l6öfl (Plavini) தண்ணில் மிதக்கக்கூடிய கலையை வளர்க்கும் சுவாசப் பயிற்சி முறை இது. இவ்வாறு பிராணயாமத்தில், பெரும் பயிற்சிகள் பெற்று பழகிய நிலையில், உயிர்ப்பினை உள்ளே அடக்கி சுவாசிக்கிறபோது அகத்தே பல ஒலிகள் ஏற்படும் என்று சித்தர்களும் யோகிகளும் கூறுகின்றார்கள். இப்படிப்பட்ட ஒசைகள் பத்து என்றும் கணக்கிட்டிருக்கின்றார்கள். "மணிகடல், யானை வார்குழல் மேகம் அணிவண்டு தும்பி வளையே பேரிகை யாழ் தணிந்தெழு நாதங்கள் தாம் இவை பத்தும் பணிந்தவர்க் கல்லது பார்க்க ஒண்ணாதே" (திருமந்திரம் 586) மணியோசை, கடலோசை, யானையின் ஒசை, புல்லாங்குழல் ஒசை, மேகத்தின் ஒசை, வண்டின் ரீங்காரம், சங்கொலி, மேளம் போன்ற பேரிகை, யாழ் ஒலி என்பது பத்து ஒசைகளாகும். இவற்றை, பிராணாயாமத்தில் சிறந்து விளங்குவோரன்றி, வேறெவராலும் பார்க்க முடியாது என்று திருமூலர் பாடுகிறார். வெளியிலிருந்து காற்றை உள்ளே சுவாசிக்கிற போது உள்நாவை கொஞ்சமாக மூடி குரல்வளையில் உள்ள ஒலிப்பெட்டியில் உள்ள இரண்டு மெல்லிய தகடு போன்ற திசுக்களின் மீக காற்mை மோககிm போக லிை எற்படுகின்ாக.