பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[9. நமக்குரிய சுவாச முறைகள்) சுவாசம் என்றால் மூச்சிழுத்தல், மூச்சை வெளியே விடுதல் என்கிற சுகமான காரியத்தை, சுதந்திரமாகச் செய்கிற செயல் என்பது அர்த்தம். சுய+வாசம் என்ற இரு சொற்கள் தாம், ஒன்று சேர்ந்து சுவாசம் என்று மாறி வந்தது என்பார்கள். வாசம் என்றால் வாழ்தல், ஜீவித்தல் என்றும் சுய என்றால் தானே என்றும் அதற்கு அர்த்தம் என்றும் விரித்துரைக்கின்றார்கள். தான் வாழ்வதற்காக, தானே செய்கிற, செய்து கொள்கிற காரியம் தான் சுவாசம் ஆகிறது. எனக்காக நீங்கள் சுவாசித்துக் கொண்டிருங்கள் என்று யாரும் யாரையும் கேட்கவும் முடியாது. ஆணையிடவும் முடியாது. கேட்டாலும் நடக்காது. அவரவர் வேலையை அவரவர் ஒழுங்காகச் செய்தாக வேண்டும் என்ற சித்தாந்தத்திற்கு, சிறந்த உதாரணம் தான் சுவாசம். இந்த உலகத்தில் ஒரு மனிதருக்கு முக்கியமான மூன்று தேவைகள் உணவு, உடை உறையுள் என்பார்கள். இப்படிச் சொன்னால், நம்மை இதிகாச காலத்து ஆள் என்று பட்டம் கட்டி, சாலையோரமாகத் தள்ளி வைத்துவிடுவார்கள். இப்போதைய நாகரிக காலத்துத் தேவைகளில் தலையாய இடம் வகிப்பது உடலுறவு, பிறகு உணவு, கொஞ்சம் உடை.