பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணம் ஆகிற வரையில் காமத்தைப் பற்றியே பேச்சு. அது பற்றிய ஆவேசம். கல்யாணம் ஆன பிறகு குழந்தைகள், சொத்துக்கள் பற்றியே கவலை. கலக்கம். பிறகு கற்றத்தால் குற்றம், பிள்ளைகளால் துக்கம். பேராசைகளால் கஷ்டம். புரியாத தன்மைகளால் நஷ்டம். இப்படித்தான் ஒவ்வொருவரும், தங்களைத் தாங்களே வருத்திக் கொள்கின்றனர். வதைபடுகின்றனர். சுற்றுப்புறப்பிரச்சினைகளால் உதைபடுகின்றனர். ஏன்? இன்பம் என்றால் காமம் என்ற நினைவு இருப்பதால்தான் காமம் வந்ததும் கண்களை மறைக்கிறது. காமம் கோபத்தை மட்டுமல்ல - குரோதத்தையும் வளர்க்கிறது. குரோதமும் விரோதமும் ஒரு வரது உடலைப் புண்ணாக்குவதுடன் நிற்காமல், மனதையும் மண்ணாக்கி விடுகிறது. நாம் இன்பம் என்றால் நாவுக்கு சுவையான உணவு. நாளுக்கும் சுகமான உடலுறவு. மிகுதியான பொருள் வரவு என்று எண்ணுவதால் தானே வேதனை சோதனை. நாம் உண்மையான அர்த்தமாகிய அகமகிழ்ச்சி என்று அதை எடுத்துக்கொள்ளலாமே? அது தான் இல்லை. அகமகிழ்ச்சி உண்மையான இன்பம். அக மகிழ்ச்சியைத் தான் ஆனந்தம் என்கிறார்கள். ஆ என்றால் ஆத்மா. நந்தம் என்றால் வளர்தல், மிகுதியாதல் என்று அர்த்தம். ஆனந்தம் என்றால் ஆத்மாவின் மகிழ்ச்சி. அதாவது ஆத்மாவின் திருப்தி. ஆத்மாவின் திருப்தியைத் தான் நான் இன்பம் என்று இங்கே சொல்லுகிறேன்.