பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ T- "بس۔" - நுரையீரலில் அதிகக் காற்றை நிரப்ப நிரப்ப அதிகமான நன்மைகள் ஏற்படும். சுகங்கள் அகப்படும். தேகமும் சுகப்படும். மனமோ மேம்படும். அது எப்படி நடக்கும்? உணவு இல்லாவிடில், பல நாட்கள், பல வாரங்கள், முடிந்தால் சில மாதங்கள் வரை உயிர் வாழலாம். ஆனால் உயிர்க்காற்று இல்லாவிடில் சில நொடிகளில், சில நிமிடங்களில் உயிர் பிரிந்து போய் விடும். ஆமாம் பறந்து போய்விடும். இவ்வளவு அத்யாவசியமான, உடலுக்கு ஆதாரமான சுவாச வேலையை, மற்ற எல்லா உடல் உறுப்புகளைப் போலவே, சுவாச உறுப்புக்களும் செய்கின்றன. இந்த சுவாசப் பணியானது தன்னை அறியாத உள் நினைவால் கட்டுப்படுத்தப்படுகிறது. சுவாசிக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படுகிற போது தான், நமக்கு சுவாசம் பற்றிய உணர்வே வருகிறது. நுரையீரல் பாதிக்கப்பட்டால், அல்லது புளுரா என்ற நோய் ஏற்பட்டால், மார்பைச் சுற்றிய பகுதிகளில் நலிவு ஏற்பட்டால், அல்லது மற்ற உறுப்புகளுக்கும் ஏதாவது நடந்து விட்டால், இத்தகைய சுகமான சுவாசம் தடைப்பட்டுப் போகிறது. உடைபட்டுப் போகிறது. ஏனென்றால், உடலுக்கு எவ்வளவு உயிர்க்காற்று தேவையோ, அந்தத் தேவைக்கு ஏற்ப, உடல் தனது அதிகபட்ச திறமையினால், வேண்டிய காற்றை சுவாசித்துக் கொள்கிறது. ஊளைச் சதைகள் கொண்ட உடம்பு உள்ளவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், கூன் விழுந்த வளைந்த முதுகுள்ளவர்கள், மற்றும் விசையிழந்து தசை கொண்டவர்கள் எல்லாம், குறைந்த பட்ச திறமை உடையவர்களாகி விடுவதால் அவர்களது சுவாசம் அரைகுறையாகி விடுகிறது.