பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இபரின்பம தரும பிராணாயாமம -T 2. கும்பகம் : கும்பம்+அகம் என்று நாம் பிரிக்கலாம். கும்பம் என்றால் குவியல் என்றும், அகம் என்றால் உள்ளே என்றும் பொருள் வருகிறது. உள்ளே இழுத்த காற்றை, நுரையீரலுக்குள் நிறைத்துக் குவித்து வைத்திருக்கும் நிலைதான் கும்பகம். 3. இரேசகம் : உள்ளே இருக்கும் காற்றை, வெளியே அனுப்புதல் அதாவது நுரையீரலை அழுத்தி, முடிந்த அளவு, தேங்கியுள்ள கரியமில வாயுவை வெளியே அனுப்புதல். 4. சன்யகம் : காற்றை உள்ளிழுக்காமலும் அடக்கி வைக்காமலும், வெளியே விட்ட பிறகு, எதுவுமே செய்யாமலும், சும்மா இருக்கிற நிலை. சன் என்றால் நல்ல என்றும், அகம் என்றால் உட்புறம் என்று அர்த்தம் வருவதால், உடல் ஒரு நல்ல, அற்புதமான, ஆனந்தமான நிலையில் இருப்பதால், இதைத்தான் சும்மா இருக்கும் சுகம் என்று சொன்னார்கள். இப்படிப்பட்ட இந்த நான்கு நிலைகளை நாம் எப்படி பழகிக் கொள்வது, பயிற்சி செய்வது, பயன் பெறுவது என்றால், அதற்கும் ஆலோசனைகளைத் தந்து விட்டுத் தான் சென்றிருக்கின்றனர். நமது முன்னோர்கள். அவர்கள் கொடுத்த கணக்கைப் பாருங்கள் 1 : 4 : 2 என்பதுதான் அந்தக் கணக்கு பூரகம் 1 மடங்கு கும்பகம் 4 மடங்கு இரேசகம் 2 மடங்கு. இதனை முன்னரே விளக்கியிருப்பதால், இங்கே இத்துடன் நிறுத்தி, நினைவு படுத்தி விட்டு, பிராணாயாமம் தருகின்ற பயன்களை தொடர்ந்து தெரிந்து கொண்டு, பயன்பெறுவோம்