பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t *ئےr = இவ்வளவு தான் பிராண வாயுவின் அளவு என்று தெரிந்து கொண்ட பிறகு, நாம் அதிகமான காற்றை உள்ளே இழுத்தால் தான், கொஞ்சமாவது உயிர்க்காற்றை, அதிகமாகப் பெற்றுக் கொள்ள முடியும். வெளியில் திரிகின்ற காற்று கடல் மட்ட அளவில் அமைந்திருக்கின்ற போது (Sea Level) சாதாரண அழுத்தம் உள்ளதாகவே அமைந்திருக்கும். அந்த அழுத்தத்தின் அளவு 700 மில்லி மீட்டர் மெர்க்குரி என்றும் கணக்கிட்டிருக்கிறார்கள்.(700 mm of mercury) கடல் மட்ட அளவிலிருந்து நாம் உயர பாகத்திற்குச் செல்லச் செல்ல, காற்றின் அழுத்தம் குறைந்து போகிறது. அதனால்தான் மலை உச்சிக்கு நாம் போகிறபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு விடுகிறது. நாம் ஒவ்வொரு தடவையும் உள்ளே மூச்சிழுக்கிறபோது 500 அளவுதான் நுரையீரல்களுக்குள் காற்று செல்கின்றது. ஆனால் நமக்குக் கிடைக்கிற உயிர்க்காற்றின் அளவோ 105 cc தான் இருக்கிறது. மீதியெல்லாம் கழிவான கரியமல வாயுவாக வெளியே வந்து விடுகிறது. இப்படி நாம் இருக்கிற வரையிலும் வெளிக்காற்றை உள்ளே இழுத்து சுவாசிக்கிற வேலையைச் செய்து கொண்டுதான் இருக்க முடிகிறது. வாழ முடிகிறது. ஆக, சராசரி ஆயுள் உள்ள ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதுமாக 500 மில்லியன் தடவைகள் சுவாசிக்கிறான் என்றும் விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 3000 கேலன் காற்றை சுவாசிக்கிறோம். ஒரு வாாக்கிற்க 21000 கேலன் காற்mை சுவாசிக்கிmோம்.