பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஒரு வருடத்திற்கு 1.15 மில்லியன் கேலன் காற்றை சுவாசிக்கிறோம். அதாவது கால் மில்லியன் டன் காற்று என்றும் கூறுவார்கள். ஒரு கேலன் 5 லிட்டர் கொண்டது என்பதும் ஒரு கணக்கு. இவ்வாறு சுவாசிக்கும் போது நாம், மூக்கு வழியாகத் தான் சுவாசிக்க வேண்டும் என்பதையும் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனென்றால், நாம் சுவாசிக்கின்ற காற்றின் மூலமாக தினந்தோறும் ஏறக்குறைய 20,000 மில்லியன் தூசுதும்புகள், சிறு துணுக்கான பொருட்கள் உள்ளே புகுந்து விடுகின்றன. மூக்கின் வழியாக நாம் சுவாசிக்கிற போது நமக்கு மூன்று விதமான பாதுகாப்புகள் கிடைக்கின்றன. 1. சுவாசிக்கும்போது பொழுதே காற்றின் வாசனையை அறிந்து கொள்ள முடிகிறது. 2. மூக்கின் உள்ளே செழித்திருக்கின்ற மயிர்க் கற்றைகள் தூசி தும்புகளை வடிகட்டிவிடுகின்றன. 3. உள்ளே வருகின்ற காற்றைப் பதப்படுத்தி, வேண்டிய அளவு சூடுபடுத்தியே உள்ளே அனுப்புகின்றன. இதனால் என்ன பயன்? எப்படி பாதுகாப்பு என்றால், நுரையீரல்களில் உள்ள மைக்ரோ பேகஸ் என்ற செல்கள் தூசு தும்புகளை விழுங்கி ஜீரணித்து விடுகின்றன. இல்லாவிட்டால் அவற்றை அழித்து விடுகின்றன. அழிந்துபோன அந்நியப் பொருட்கள் எல்லாம் வாய்க்கு கொண்டுவரப்படுகின்றன. அவற்றை நாம் துப்பி விடுகிறோம். இல்லையென்றால், அவற்றை நாம் நம்மை அறியாமலேயே விழுங்கி விடுகிறோம். அப்போதும் பாதுகாப்புத்தான். இதுவரை நாம் சாதாரணமாக சுவாசிக்கிறபோது ஏற்படுகின்ற ஏற்றங்கள் மாற்றங்கள் பற்றி விளக்கமாக அறிந்து கொண்டோம். இந்க சுவாசக்கையே சுயநினைவோடு சுபிட்சம் தரும் என்ற