பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆழந்த சுவாசததால அகம மகழசசி அடைகிறது. ஆனநதப பெருக்கு ஏற்படுவதால் அபரிதமான களிப்பும் பெருகுகின்றது. ஆற்றல் மிக்க உயிர்க்காற்று அகத்தே நிறைகிறபோது, உடலில் மலர்ச்சி உண்டாகிறது. உள்ளத்தில் எழுச்சி ஊறுகிறது. அதனால் மனித தேகத்தில் நல்ல தெம்பும் தெளிவும் ஏற்படுகிறது. சீரான நேரான ஜோரான நடை நடக்கும் ஆற்றல் மிகுந்து கொள்கிறது. அத்துடன் நிறுத்தி விடாமல் உடம்பில் உள்ள சோம்பலை விரட்டியடித்து விடுகிறது. சோம்பல் என்றால் மயக்கம், தளர்ச்சி, தூங்கல், அழுத்தல் எனப் பல பொருட்கள் உண்டு. மடி என்றும் சோம்பலைச் சொல்வார்கள். மடிந்து ஒடிந்து போவதால் மட்டும் அதற்குப் பெயர் மடி இல்லை. வாழ்வின் முனைப்பும் முன்னேற்றமும் மடிந்து போவதுடன், அவர் வாழ்வே அற்பாயுளாகவும் முடிந்து போகிறது என்பதால் தான். கம்பீரமாக நடக்கச் செய்யும். கிளர்ச்சி மிகு செயல்களில் எல்லாம், கன கச்சிதமாக செயல்பட வைக்கும். இதைத் தான் நாம் அணிநடை என்கிறோம். அழுகுநடை என்கிறோம். ஆண்மை நடை என்கிறோம். மேன்மை நடை என்கிறோம். தலை தொங்கிப் போய், திறம் தேங்கிப் போய், நிலை தங்கிப் போய், நினைவுகள் மங்கிப் போய் விடுகின்ற உடல்நிலையில், எல்லாமே பறந்து போகின்ற உண்மையைச் சொன்னோம் என்கிறார் திருமூலர். உணர்வுடையோருக்கு என்பதால் உண்மையான அறிவுமிகுந்தவர்கள் என்கிறார். துயிலெழுதல், அயர்வு நீங்குதல், தெளிதல், பகுத்தறிதல், அனுபவித்தல், ஆராய்தல், உள்ளம் நெகிழ்தல் போன்ற குணங்களெல்லாம் உணர்வுடையாருக்கே உண்டு.