பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அதனால்தான் உண்மையைச் சொன்னோம் என்கிறார் திருமூலர். இப்படிப்பட்ட உணர்வுடைய மக்களாக, நம்மை மாற்றுகிற மந்திர வேலையைத் தான் பிராணாயாமம் செய்கிறது. சுவாசப் பணியானது சுத்தப்படுத்துகிறது. ஜீரணப்பணியை விரைவு படுத்துகிறது. இரத்தத்தின் தூய்மையை அதிகப்படுத்துகிறது. உடல் உறுப்புகளுக்கு உணவாக, உணவுச் சத்தை மட்டுமல்லாமல் உயிர்காற்றையும் நிறையக் கொடுத்து வளர்த்து விடுகிறது. வாழ்விக்கிறது. இதயத்தின் வலிமையை ஈடற்றதாக மாற்றுகிறது. நுரையீரல் பகுதிகளை நிறைந்த சக்தியுள்ளதாக நிரப்புகிறது. அத்துடன் உள்ளுறுப்பு மண்டலங்களில் ஒப்பற்ற பணிகளை மேலும் ஒப்பற்றதாக ஆக்குகிறது என்பதுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பயன்கள் என்றால் அதற்கும் மேலே கிடைக்கக்கூடிய பயன்களாகவும், ஆத்ம திருப்தி தரும் அற்புதங்களாகவும் அமைந்திருக்கும் சுகப் பயன்களையும் நாம் பெறவேண்டும் அல்லவா! அதற்குப் பெயர் தான் பேரின்பம் தரும் பிராணாயாமம்.