பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரின்பம் தரும் பிராணாயாமம் 69 --سے [. என்றும் இளமையாய் இருக்கலாம்) காற்றை சுவாசிப்பது நமது கடமை. கட்டாயமாகச் செய்தாக வேண்டிய காரியம் இது. வீரியமான வேலையும் இதுதான். வேண்டாம் என்று சுவாசத்தை யாரும் விட்டுவிட முடியாது. வெறுத்து ஒதுக்கி விடவும் முடியாது. பிறகு பார்க்கலாம் என்று ஒத்திவைக்கவும் முடியாது. ஆனால் வேண்டும் என்று விரும்புகிறபோது அதிகரித்துக் கொள்ளலாம். அதனால் வேண்டிய எல்லாவற்றையும் பெற முடியும். அத்தகைய அரிய சக்தியை. அளப்பரிய பேராற்றலைத்துண்டிவிடுகிற தூய சக்திதான். பிராணாயாமம் என்று பேசப்படுகிறது. அப்படி என்ன சக்தி உண்டு? ஆற்றல் உண்டு. இந்த உலக வாழ்க்கை நிலை இல்லாதது என்பார்கள், என்றாலும் 64 கலைகளை ஆக்கவும் பெருக்கவும் கூடிய வல்லமை பெற்றதாக தேகம் விளங்குவது நமக் குத் தெரிந்ததுதானே ! அப்படிப்பட்ட திடமான மெய் ஞானத்தைத்தந்து கொண்டே, மேலும் பல வியப்பூட்டும் மேன்மையான காரியங்களையும் நாம் பேரின்பம் பெறுவது போல் பிராணாயாமம் செய்து தருகின்றது. நமக்கெல்லாம் நல்ல வழியினைக் காட்டிச் சென்றுள்ள திருமூலர் ாடியிருக்கும் பாடலுக்குள் புகுந்து பார்ப்போம்.