பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r AAS SAH S S H S CH S ; p 0· ردعاء ں cکے ------ or * * *---- "வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் தெளியக் குருவின் திருவருள் பெற்றால் வளியினும் வேட்டு வளியனும் ஆமே" (551) வெளியிலே திரிகின்ற காற்றினை வளியினை நன்கு ஆழ்ந்து சுவாசித்து நிறைய நுரையீரலில் தேக்கி வைத்தால், வயதாகிய காலத்தில் முற்றிப் போன தேகமாக வெளிப்புறத்தில் உடல் காட்சி தந்தாலும், அமைப்பிலும் உழைப்பிலும் சிறப்பிலும் அந்தத் தேகம் இளமையாகவே (பிஞ்சாகவே) இருக்கும் என்கிறார் திருமூலர். பிராணாயாமத்தைத் தொடர்ந்து செய்து வருகிற ஒருவருக்கு இளமைத் தோற்றம் என்பது எப்போதும் உண்டு. தப்பாது உண்டு. காலத்தால் பெற்ற உடலின் கோலம் மாறலாம். ஆனால் மனக்கோலம் என்பது எப்போதும் இளமை மாறாக் கோலம் தான் கொண்டிருக்கும். நமது உடல் எப்படி எப்படியெல்லாம் மாறி வருகிறது என்பதை குண்டலகேசி கூறுகிற அழகைப் படியுங்கள். 'பாளையாம் நன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் காளையாம் பருவம் செத்தும் காமுறும் இளமை செத்தும் மாளும் இவ் வுடலின் முன்னே மேல் வரும் மூப்பும் ஆகி, நாளும் நாள் சாகின்றோ மால் நமக்கு நாம் அாத தென்னே"