பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பேரின்பம் தரும் பிராணாயாமம் 7| குழந்தைப்பருவம். பாலப்பருவம். காளைப்பருவம். இளமைப்பருவம். பதமைப்பருவம். முதுமைப்பருவம் என்றெல்லாம் பல பருவங்கள் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. ஒவ்வொரு பருவமும் மாறி வருகின்றது என்பதை மாறி என்று கூறாமல் செத்து என்று குறிப்பிடுகின்ற வார்த்தையைப் பார்த்தால், அந்தப் பாட்டு வேறு ஏதோ ஒரு முக்கியமான கருத்தைப் கூற முனைப்பாக முயல்கின்றது என்பது நமக்குப் புரிகிறதல்லவா? உடலிலே தினம் தினம் சத்துக் குறைந்து கொண்டே போவதைத்தான், செத்துக் கொண்டே வருகிறோம் என்று பாடுகிறது அந்தப்பாடல். நாளும் நாம் சாகின்றோமால் என்பது நமக்குள்ளே நிறைந்திருக்கும் உயிர்ப்புச்சக்தியை செலவழித்துக்கொண்டே வருகிறோம். சேர்த்துக் கொள்ளாமல் விடுகிறோம். அதனாலேயே ஜீவனுள்ள செல்கள், பாவமுள்ள செல்களாக பழுதுபட்டு, பங்கப்பட்டு, நீங்காத சோர்விலே நிலையிழந்து போகின்றன. அந்தச் சோர்வு நிலைக்குத் தீர்வு காணுகின்ற ஒரு வழிகாட்டுதலுக்காகவே, திருமூலர் வயத்தில் அடக்கி என்று பாடுகிறார். நன்கு, நிறைய ஆழ்ந்து, தொடர்ந்து சுவாசிக்கும் காற்றானது, இரத்தப் பைக்குள்ளே நிறைந்து விடுகிற போது, இரத்தமும் காற்றைப் பெற்று, இழந்த தூய்மை சக்தியை மீட்டுக் கொள்வதும் நாம் அறிந்ததுதானே! சேமித்து வை என்றதும் நமக்கு செல்வம் பணம் நகை என்பதுதான் நினைவுக்கு வருகிறது. நமது முன்னோர்கள் சேமிக்கச் சொன்னது, செலவைக் இறைக்கச் சொன்னது, உயிர்காற்றைப் பற்றித் தான். 'ர்ந்தெழுந்து புறத்தே போகின்ற உயிர்ப்பினை உள்ளே ஒடுக்குக " என்று திருமூலர் வற்புறுத்துவது இந்தச் செயலைத் தான்.