பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


74 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா மாறாக, நல்ல இளமைப்பண்பு கிளர்ந்தெழுந்து நிற்கும். அதனால்தான் பளிங்கெழுந்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் என்றார். பிஞ்சு என்றால் இளமை என்று அர்த்தமாகும். உடலுக்கு இளமை முதுமை என்று இரண்டு கூறுகளைத் தான் எல்லோரும் பேசுவார்கள். பிராணாயாமம் செய்கிறபோது மூன்றாவதாக ஒரு நிலை வந்து விடுகிறது. இளமை முதுமை பதமை இளமையாக இருக்கிறபோது உடலுக்கு நெகிழ்ச்சித்தன்மை (Flexibility) அதிகம் உண்டு. முதுமை காலத்தில் முதுகெலும்பின் நெகிழ்ச்சித் தன்மை குறைந்து, வளையாது நிமிர்ந்தே இருந்து, பிடிப்பிலும் துடிப்பிலும் அவதிப்படும். பதமை என்பது பதம்+ மெய் மெய்யை பதமாக்கி முதுமைக் காலத்திலும் இளமையாக வாழச் செய்வது, எப்போதும் பதப்படுத்தி வைத்திருப்பது. ஆகவே, பிராணாயாமம் செய்கிறபோது பதமான தன்மை ஏற்படுவதால்தான், வாழும் காலமெல்லாம் வாலிபராக வாழலாம். இளமையோடு திகழலாம். இதுவே பிராணாயாமத்தின் பேரின்பச் செயலாகும். முதுமையான அனுபவங்கள், பதம் மிகுந்த உடல் அமைப்புகள், இளமை நிறைந்த எழுச்சிகரமான செயல்கள் எல்லாம் பிராணாயாமம் தருகின்ற பேரருள் மிக்கப் பரிசுகளாகும்.