பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இபரினபம தரும பிராணாயாமம 75 っ [2. வாழ்நாள் முழுவதும் ഖണതഥ്ഥ) என்றும் இளமையாய் இருக்கலாம் என்ற நம்பிக்கையுடன் பிராணாயாமப் பயிற்சிகளை செய்கிறபோது, பேரின்பம் மட்டும் பரிசாகக் கிடைக்கவில்லை! பெறற்கரிய பெருமிதம் நிறைந்த இளமை மட்டும் உறவாகத் தொடராமல், வாழ்கிற காலம் வரை நலமோடு, பலமோடு, வலிமையோடும், வாழ்ந்து கொள்ளலாம் என்ற வரப்பிரசாதமும் கிடைக்கிறது. மாறுகின்ற காலங்களை மாற்றுகின்ற சக்தி படைத்த உலகமானது, பிறக்கும் மக்கள் கூட்டம் வந்து தங்கிப் போகும் விடுதியாகத் தான் விளங்கி வருகிறது. என்றாலும் விடுதியில் வியாதியோடு இருந்தால், வழிப்போக்கருக்கு நித்திரையேது? நிம்மதி ஏது? நினைப்புகளில் சிலிர்ப்பு ஏது? சிந்தனைதான் ஏது? எப்போதும் புதிதாக, புதினமாக, புத்துணர்ச்சியும், பண்பான கிளர்ச்சியும் உடலிலே படைத்துக் கொண்டிருக்க வேண்டுமானால், உடலிலே உயிர்ப்புச் சக்தி எப்போதும் உலாவந்து கொண்டிருக்க வேண்டுமல்லவா! அந்த உயிர்ப்பினை எப்படி உரத்தோடு பெறுவது? அதற்கான ஒர் உபாயத்தை, அருமையான விளக்கத்துடன் தந்திருக்கிறார் நம் தமிழ்.குலச் சித்தர், திருமூலர். எங்கே இருக்கினும் பூரி இடத்திலே அங்கே அது செய்ய ஆக்கைக்கு அழிவில்லை (552)