பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


(1з. உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும்) காற்றைப் பிடிக்கும் கணக்கை கற்றுக்கொண்டு அதன் நுட்பத்தைப் பெற்றுக்கொண்டு, நுண்மைக்குள்ளே நூதனத்தைப் பற்றிக் கொண்டு வாழ்கின்ற யாரும் வல்லமை பெறுவார்கள். வலிமை பெறுவார்கள். வாழ்கிற நாள் வரை, எல்லா நலமும் வளமும் பெறுவார்கள் என்று இது வரை அறிந்து கொண்டோம். புறத்தில் புலனாகின்ற காட்சியைக் கண்டுகளிக்க உதவும் மூச்சடக்கும் பயிற்சி, அகத்திற்குள்ளேயும் ஆற்றுகின்ற அரிய செயல்களை, நான்கு வரிகளில் மிகவும் நயம்பட பாடிச் சென்றிருக்கிறார் திருமூலநாயனார். புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட உள்ளே நின்மல மாக்கில், உறுப்புப் சிவக்கும் உரோமம் கறுக்கும் புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே! (556) உடம்பின் உள்ளிருந்து புறப்பட்டு வெளியே சென்று மீண்டும் உடம்புக்குள் புகுந்து திரிகின்ற உயிர்ப்பான மூச்சுக் காற்றை முறைப்படி பூரித்து உள்ளே கும்பகப்படுத்துகிற போது, பெறுகிற பயன்கள், எப்படி இருக்கும்? அதற்குப் பதில்தான். உறுப்பு சிவக்கும், உரோமம் கறுக்கும், உடலை விட்டு உயிர் புறப்பட்டு போகாமல், நீடித்து உலாவரும். இம்மூன்று சொற்கள் காட்டுகின்ற பயன்களை நாம் கொஞ்சம் விளக்கமாகக் காணலாம். உறுப்பு சிவக்கும் உறுப்பு சிவக்கும் என்றால் உடல் பொன்னிற மேனி ஆகிவிடும் என்று ஒரு சிலர் இதற்கு உரை எழுதி