பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

JSJAS A SAS SSAS SSAS இப்படி நாளும் பொழுதும் தெளிவாக இருப்பதால்தான் நட்டம் இருக்க நமன் இல்லை தானே என்று திருமூலர் சொல்லுகிறார். நட்டம் இருக்க என்பது, சுவாசத்தை நிலைநிறுத்திக் கொள்கிறபோது, எமன் அவரிடம் வரமாட்டான் என்கிறார். உடல் என்னும் வீடு தளர்ச்சியடையாமல் வளர்ச்சியுறும். இட்ட அவ்வீடு இளகாது. நட்டம் இருக்க நமனில்லை. இந்த உடலை விட்டு, புறப்பட்டுப் போகாது என்றதால், உடல் செழிப்போடு வாழ்கிறது. உயிர் சிறப்போடு உலவுகிறது. வாழ்க்கையோ வளமாக உலா வருகிறது என்று தானே அர்த்தம். சுவாசத்திற்கு அவ்வளவு ஆற்றலா என்றால் அப்படித்தான் இன்னும் இருக்கிறது இன்பங்கள். மேல் கீழ் நடுப்பக்கம் மிக்குற பூரித்து (554) மேல் என்றால் தலை, கண், காது முதலிய உறுப்புக்கள். கீழ் என்றால் கால், பெருவிரல் முதலிய உறுப்புக்கள். நடு என்றால் நெஞ்சம், கொப்புழ், முகம் முதலிய உறுப்புக்கள். இவையெல்லாம் நிறையுமாறு பிராணவாயுவை உள்ளிழுத்தால், எல்லா நலமும் பெற்று இன்பமாக வாழலாம் என்கிறார் திருமூலர். நமது நுரையீரலுக்குள்ளே 300 முதல் 350 மில்லியன் நுண்ணிய காற்றுப் பைகள் இருக்கின்றன. ஒரு நாளைக்கு 3000 கேலன் காற்று தேவைப்படுகிறது. காற்றின் கொள் அளவு குறைகிற போதுதான் செல்களுக்கும் போதிய காற்று கிடைக்காமல், செல்கள் தள்ளாடிப் போகின்றன. தளர்ச்சி அடைந்து வளர்ச்சி இழந்து போகின்றன. அதனால் தான் பிராணாயாமம் நன்கு செய்கிறபோது, உறுப்பு சிவக்கிறது. உரோமம் கறுக்கிறது. உடலிலிருந்து உயிர் பிரியாமல் தொடர்கிறது. நீண்ட காலம் என்கிற பயன்கள் இலவசமாகக் கிடைக்கின்ற பயன்கள் அல்லவா! இவற்றை அடைய நாம் என் மறுக்க வேண்டும்?