பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- பேரின்பம் தரும் பிராணாயாமம் 87 જણ ஆனதிற் சண்ட வாயுவின் வேகியாம் தாழா நடை பல யோசனை சார்ந்திடும் சூழான ஒரெட்டில் தோன்றாது நரைதிரை தாழான ஒன்பதில் நான்பரகாயமே (627) பிராணாயாமப் பயிற்சி என்பது யோகப் பயிற்சியாகும். யோகப் பயிற்சி என்பது அகத்தவம் போன்றது. அதாவது, ஆன்ற நெறிமுறைகளை விட்டு விலகாது, நினைப்பிலும் நீங்காது, அனுதினம் விடாது செய்கின்ற ஆன்மப் பயிற்சி மேன்மைப் பயிற்சி. ஆறு ஆண்டுகள் தொடர்ந்து செய்கிறபோது கிடைக்கும் பயன்கள் நோயனுகாத உடல். நொடியும் அகலாத மன சுகம். இகத்தில் வாழ்கிறபோதே பெறும் எடுப்பான நடை. மிடுக்கான வாழ்க்கை. மேன்மையால் உலா வரும் யாக்கை. இந்த ஆறு ஆண்டுகளிலேயே ஒருவர் அகத்தவப் பயிற்சியில் ஒன்றிப் போய்விட்டால் உண்டாகும் பயன்கள்தாம் பெரும் பயன்கள். ஆமாம் அவை தான் பேரின்பப் பயன்கள். 627 பாடலின் ஒவ்வொரு வரியும் பேசுகின்ற பெருமையைப் பாருங்கள் புரியும். ஏழானதிற் கண்ட வாயுவின் வேகியாம். அகத்தவமான அரும் பயிற்சியாம் யோகப் பயிற்சியையும், ஆன்ற மூச்சுப் பயிற்சியையும், முனைப்புடன் செய்து வந்தால் பெறுகிற பயன் என்னவென்றால், எளிதாகக் கடக்கின்ற ஆற்றல் கைகூடி வரும். ஏழானதில் என்றால் ஏழு ஆண்டுகள் என்று பொருள். சண்ட வாயு என்றால் கடுங்காற்று என்று அர்த்தம். வேகி என்பது வேகம் உடையவன் என்பது தெளிவு. இதை பல சொற்கள் மூலம் அறிந்து இன்புறலாம். சண்ட கோபி —-- - - - -— I ——--- — so - - ---------- . بیبیسی "Trك