பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்ட மாருதம் என்றால் பெருங்காற்று என்று பொருள் இங்கே சண்ட வாயு என்கிறார் திரு மூலர். அதாவது பெருங்காற்றினும் விரைவாகத் தங்காது அளவிலாக் கல் (மைல்) தொலைவு நடத்தல் கூடும். ஆமாம் தளாச்சியில்லாத எழுச்சி மிக்க நடை. எப்போதும் களைத்துப் போகாத கால்கள். உழைக்க விரும்புகிற தேகம் உயிர்ப்புச் சக்தியின் உந்துதலால் உண்டாகும் உற்சாகம். அதாவது மனோ சக்திக்கு ஈடு கொடுத்து இயங்குகிற மகா தேக சக்தியை ஏழு ஆண்டு பயிற்சியால் பெற முடியும். தாழா நடை பல யோசனை சார்ந்திடும் யோசனை என்றால் ஒர் எல்லையளவு என்று அர்த்தம். இவ்வளவு தான் தூரம் என்று கணக்கிட முடியாத தூரத்தைக் கடக்கும், நடை. ஆமாம். தாழாத நடை என்று சிறப்பாகவே கூறுகிறார். சூழான ஒரெட்டில் ஒன்றாது நரைதிரை எட்டாம் ஆண்டுப் பயிற்சி செய்தால் கிடைப்பது நரை திரையற்ற தேகம். நரை என்றால் தலை முடி வெளுத்துப் போவது, திரை என்றால் சுருக்கம் தோலில் விழுவது என்று எல்லோருக்கும் தெரியும். மூச்சுப் பயிற்சியின் மகத்துவத்தால் உள்ளுறுப்புகள் சிறப்பும் செழிப்பும் பெறுவதால், தேகத்தின் தோலமைப்பு பங்கம் எதுவும் அடையாமல் பாதிக்கப்படாமல், வயது தான் கூடுமே தவிர வாட்டம் அடைவதில்லை. மினுமினுப்புடன் மெருகேறி இருந்த தோலின் இளமைத் தோற்றம் கரை நோக்கி ஓடி வருகிற நீர் அலை அலையாய் உயர்ந்தும் தாழ்ந்தும் தெரிவது போல, தேகத்திலே உள்ள தோல் பகுதியின் மேற்புறம், மினுமினுப்பை இழந்து உலர்ந்து தளர்ந்து சுருக்கம் பெற்று கரகரப்புத் தன்மையினை அடைந்து, சுரணையைக் கூட சில சமயங்களில் இழந்து விடும்.