பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


– = − == − = - m. - - - - - - م – – تتم - - Cلاعتر - - - - - - - - - - --- தாழான ஒன்பதில் நான்பர காயமே ஒன்பது ஆண்டுப் பயிற்சிக்காலத்திலே உடல் ஒளி பொருந்திய காயமாக (தேகமாக) மாறிவிடுகிறது. அதைப் பரகாயம் என்கிறார் திருமூலர். அதாவது ஒளி பொருந்திய தேகம் என்றும் தூமாயை உடம்பு என்றும் கூறுவார்கள். ஊன் உடல் வேறு செய்தான் என்று சித்தர்கள் கூறுவார்கள். உடலை விட்டு உயிரைப் பிரித்து, வேறொரு உடலுக்குள் செல்லுகின்ற மாய முறையில் தேகத்தை தோய்த்து விடும் திறம் பெற்றவராகிறார். இது இயலுமா முடியுமா என்றால், முயற்சிக்காதவர்கள் முணுமுணுப்பார்கள். முயற்சித்தவர்கள் முடிகிறது என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். நம்மால் முடியாது என்று நாம் நம்புகிற போது இந்த செய்தியை நாம் சிரமத்துக் குள்ளாகாமல் குழம்பாமல் பார்த்துக் கொள்வோமே! பத்தாண்டுப் பயிற்சி காலத்தில் பிறர்போற்றி பணிந்து வணங்குகிற பெருமானாகவே மாறிவிடுவர். பதினோராம் ஆண்டுப் பயிற்சியில், எண் வகை சித்திகளைப் பெறுவர். பனிரெண்டு ஆண்டுப் பயிற்சியில், எல்லா உயிருக்குள்ளும் போய் வருகிற வியாபியாய் பரவி நிற்பர் என்று திருமூலர் பாடுகின்றார். ஈரைந்தில் பூரித்து தியான உருத்திரன் ஏர் ஒன்று பன்னொன்றில் ஈராறாம் எண் சித்தி சீர் ஒன்று மேலேழ் புவிச் சென்று ஏரொன்று வியாபியாய் நிற்றல் ஈராறே! (628) எண் வகைச் சித்தி என்பதை எட்டு வகைப் பேறு என்று கூறுவர்கள். 1. அணிமா 2, மகிமா 3. இலகிமா 4. பிராத்தி 5. பிரகாமியம் 6. ஈசத்துவம் 7. வசித்துவம் 8. கரிமா சித்திகள் எட்டு என்று எழுதியதைப் படித்ததும், சித்தத்தில்