பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இவையெல்லாம் நம்மால் முடியுமா என்றால், முடியாது என்டு எல்லோரும் கூறுவார்கள். ஆமாம்! முடியாதுதான். முடியாதது தான். என்றாலும் இவற்றையெல்லாம் கூறியிருக்கிறார்களே என்றால், எப்படி என்ற ஐயமும் எழுமே! நாம் வணங்குகிற கடவுள்களின் பெயர்களை இங்கே நாம் குறித்துக் கொள்வோம். கடவுள் என்றதும், இங்கே நாத்திகக் கொள்கை நடமாடி விடுமோ என்ற பயம் வேண்டாம். நம்பிக்கையுடன் ஒரு கருத்தைக் குறித்துக்கொண்டு, கதையைத் தொடருவோம். - மனிதர்களுடன் சராசரி மனிதர்களாக சேர்ந்து வாழ்ந்து, மகான்களாகத் திகழ்ந்து, அதன் பிறகு, அருள்பாலிக்கும் ஆண்டவர்களாக மாறியவர்களின் மகத்துவம் மிக்க வரலாறு எல்லாம் நமக்குத் தெரியும். ஏசுநாதர், புத்தர், மகாவீரர், ரீ கிருஷ்ணன், இராமலிங்க அடிகளார், போன்ற இவர்கள் எல்லாம் வாழ்க்கையில் பல அற்புதங்களைச் செய்தவர்கள். அவர்கள் செய்த அத்தனை அதிசயங்களும் அற்புதங்களும், நாம் மேலே விவரித்த எட்டுவகை சித்திகளில் அடங்குகிறதே! மிகச்சிறிய வடிவமான வாமன அவதாரம். விண்ணுக்கும் மண்ணுக்கும் எடுத்த விஸ்வரூபம். கடல் மேல் நடந்து வந்து, புயலை அடக்கிய அற்புதம். நோயாளிகளைத் தொட்டவுடனேயே குணமாக்கிய நூதனம. இறந்தவர்களைத் எழுப்பி நடமாடச் செய்த வித்தைகள். ஆயிரம் கோபியருடன், ஆடிப்பாடி மகிழ்ந்த விதம். நினைந்த உருவத்தில் உருமாறிக் கொண்ட சாதனை. இப்படியெல்லாம் அவர்கள் அற்புதம் செய்தார்கள் தெய்வங்களாக மாறிய பிறகா? இல்லையே!