பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- மனிதர்களாக மனிதர்களுடன் வாழ்ந்து கொண்டேதான் இப்படிப்பட்ட மகத்துவங்களைச் செய்து மகான்களானார்கள்! ஆகவே, மனிதராகப் பிறந்தவர்கள், மனம் ஒன்றி மிகவும் முனைந்து, தொடர்ந்து ஈடுபட்டு அகத்தவம் செய்து பயின்றால், பெறமுடியும் என்றுதானே இத்தனையும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அவர்கள் பெரும் செயல் ஆற்றும் மகான்களாக வாழ்ந்து காட்டிய விதத்தையே, நமது திருமூலரும் இப்படி பாடிக்காட்டியிருக்கிறார். திருமூலரின் வரலாறு மட்டுமல்ல மற்றும் பல சித்தர்களும் வாழ்ந்து காட்டியே சென்றிருக்கிறார்கள் சித்தர்களால் இவையெல்லாம் முடியும் என்று பரபரப்பாக பாடி வைத்திருக்கும் பாம்பாட்டிச் சித்தரின் பாடல்களைப் பாடியுங்கள். "துணைச் சிறு துரும்பாகத் தோன்றிடச் செய்வோம் துரும்பைப் பெரும் தூணாக தோற்றச் செய்குவோம் ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆனாய் ஆகச் செய்குவோம். - மண்டலம் முற்றும் எங்கையால் மறைத்து விடுவோம் வானத்தையும் வில்லாக வளைத்துக் காட்டுவோம் தொண்டருக்கும் சூனியம் சொல்லிக் காட்டுவோம் மூண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம். முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம். தாண்டிவரும் வன்புலியைத் தாக்கி விடுவோம். செப்பரிய மூன்றுலகும் செம்பொன் ஆக்குவோம். இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம் எங்கள் வல்லபம் கண்டு நீ ஆடுபாம்பே'