பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


96 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இவற்றை யெல்லாம் நம்மால் செய்ய முடியாது. நிச்சயமாக முடியாது. ஆனால் பிராணாயாமப் பயிற்சியால், இத்தகைய பேரின்பங்களைப் பெற்ற பெரியோர்களும் இருந்தார்கள். இருக்கிறார்கள் என்பது குறித்துக் காட்டத்தான் இந்த விளக்கமெல்லாம் இங்கே எழுதினேன். பிராணாயாமம் செய்கிற பயிற்சியால், உங்களுக்கு நல்வாழ்வு கிட்டும், நலவாழ்வு நிறையும். நோய்கள் குறையும். வந்தாலும் நொடியில் போய் மறையும். வாழ்கிற காலமெல்லாம் இன்பங்கள் குறையாமல் வளரும் மலரும் என்ற உண்மையை மட்டும் நீங்கள் புரிந்து கொண்டால் போதும். இத்தகைய பேறுபெற வேண்டும் என்ற அளப்பெரிய அவாவில் எழுந்த என் முயற்சிதான். இந்நூலை எழுதத் தூண்டியது. புதிது புதிதாகப் புறப்படும் நோய்கள் மலிந்த இந்த உலகில், புத்துணர்ச்சியும் புதுத்தெம்பும் பெற்று, மனிதப் பிறவி பெற்ற மகா அதிர்ஷ்டத்தை மகிமையுடன் வாழ்ந்து வழி காட்ட வேண்டும் என்ற என் இலட்சியம், உங்களின் நலமான வாழ்க்கையின் மூலம் அமையக் கண்டு, ஆனந்திக்கிறேன். நிறைவுவாழ்வு வாழ்க. நீடுழி வாழ்க என்று உங்களையெல்லாம் நெஞ்சார வாழ்த்துகிறேன்.