பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

ஆகவே இந்நோய் கண் டது ம் உடனடியாக ஆஸ்பத்திரிகளில் சேர்த்து தக்க சிகிச்சை செய்விக்க வே ண் டு ம். இந்நோயின் சிகிச்சையில் வைத்தியர் ஆலோசனையில்லாமல், எந்த ஆகாரத்தையும் அல்லது பானத்தையும் கர்ப்பிணிகட்குக் கொடுக்கலாகாது.

நோய் முற்றினுல் இரண்டு வகையிலும் நஷ்டம் வரும். ஆகவே, வருமுன் காக்கும் பண் பு மிகமிக முக்கியம். -

கருச்சிதைவு - தாம்பத்திய உறவில் அளவுமீறிய ஈடுபாடு காரணமா கவும், தாய்க்கு கிரந்தி முதலிய மேகநோய் இருந்தாலும், கருப்பையை தாக்கும் வகை யி ல் அடிபடுவதாலும், அதிர்ச்சி அடைவதாலும், தந்தைக்கு ரகசிய நோய் தொற்றி அதன் மூலம் தாய்க்கும் அந்நோய் தொற்றி விடுவதாலும், கர்ப்பப்பை தாயின் வயிற்றில் சரிவர அமைப்பு பெருதிருப்பதாலும், கரு தவருக வளர்ந்து விடுவதாலும் கருப்பச் சிதைவு ஏற்பட்டு ரத்தப் பெருக்கு உண்டாகும். உடனடிச் சிகிச்சை செய்யவேண்டும்: ஆகவே, கர்ப்பிணிகளுக்கு எந்த நோய் கண்டாலும், அனுபவ வைத்தியத்தை உசிதமானதற்குக் கையாண்டு, சிசுவைப் பாதிக்கும் நிலை ஏற்படும் நோய்களுக்கு உடனடி யான வைத்திய சிகிச்சை பெறவேண்டும். தகுந்த மருந் தும் ஆகாரமும் ஓய்வும் கொள்ளவேண்டும்! ---