பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§9

துடிக்கும் தாயின்-பூரண கர்ப்பிணியின் மனக்குதுசகலத் துக்கு ஒப்புவமை இருப்பதில்லை. அதனுல்தான் அவள் தன்னுடைய பிரசவ வேதனையை அறவே மறக்க எ த் த ன ம் செய்கிருள். இந்நிலையின் பழக்கத்துக்கு அவளைக் கொண்டவனும் உதவுகிருன். -

மக்கட்பேறு கொண்ட மனேயின் மங்களகரமான சுபீட்சமே ஓர் அலாதிதானே!

ஆதிநாளிலே பிரசவத்தை ஒரு பொருட்டாகவே வாரு ம் கருதவில்லையாம். ஆனல் பேறுகாலத்தையும் குழந்தை ஜனனத்தையும் மட்டும் பெரிதும் பெருமையுடன் போற்றி வந்திருக்கிருர்கள். - ‘. . .

நாகரிகம் வளர வளர, விஞ்ஞானம் வளர வளர, பிரசவம் என்பது ஒரு கண்டமாக-ஒரு சோதனையாகவே ஆகிவிட்டது. ஏனென்ருல், பிரசவத்தில் ஏற்பட்டஏற்பட்டுவருகிற பயங்கரங்கள்தாம் இதற்குக் காரணம்.

முதற் பிரசவத்தைத் தாய் வீட்டில் ைவ த் து க் கொள்வது நம் நாட்டில் பழக்கம். பெரும்பாலும் வீடு களில் வைத்துக்கொள்வதைவிட, மருத்துவ வசதிகள் நிரம்பிய ஆஸ்பத்திரிகளில் பிரசவத்தை வைத்து க் கொள்ளுவதே தற்காப்பும் பாதுகாப்பும் ஆன விவேகமான செயலாகும். கர்ப்பம் தரித்த நாள் தொட்டு பிரசவம் ஆகும் பரியந்தம் அவ்வப்போது அடிக்கடி மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வது நன்மையான செயலாகும். கிராமப் புறங்களில் உழைப்பை மதிக்கும் பெண்கள் கர்ப்பமுற்ருல் அவர்களுக்கு அநேகமாக பிரசவம் ஒரு பயமாகத் தோன்றுவதில்லை. அழுதழுது தீர்த்தாலும் நான்தானே பிள்ளை பெற்ருகவேனும்!’ என்ற ஒரு வினவுடன் தன் கஷ்டத்தைச் சகித்துப் பொறுத்துக் கொண்டு ஜிவவிளக்கை ஏற்றி வைத்துவிடுவாள்.