பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

势

தன்னிலிருந்து மகத்தான சக்தியை வெளியேற்றி-இழந்துஇன்பத்தைப் பெறுகிருன் ஆளுல் பெண் மேற்குறித்து இன்பத்தைப் பெற எதையும் தன்னிலிருந்து இழப்பது கிடையாது. உள்ளத்து உணர்வுகளின் ஆட்சியின் காரணமாகக் கிளர்ந்தெழும் ஆசைப் புரட்சியை-மோகப் போராட்டத்தை-தன்னுள் எழுந்து துடிக்கும் ஓர் உணர் வுத் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் அவள் சிருஷ்டியால் இயற்கையாகவே அமைக்கப்பட்டி ருக்கிருள். ஆகவேதான், அவளுள் எந்த இழப்பும் ஏர் படுவதில்லை. உடற் கலவியின்போது, ஆணிடமிருந்து வெளியாகும் விந்துபோல பெண்ணிடமிருந்து விந்து வெளியாவது இல்லை.

ஆகவேதான், இந்த உயிர்ச்சக்தியை-உயிர்ப்புச் சத்தைக் கட்டிக் காப்பாற்றிப் போற்றிப் பேணுவதில் ஆண்மகன் மிகுந்த பக்தி சிரத்தை கொள்ளவேண்டும் என்று அறிவாளர்கள் கூறியிருக்கின்மூர்கள்,

மோகவெறி, காமப்பித்து, மிருக உணர்ச்சி போன்ற கீழ்த்தரமான நோக்கங்களுக்கு அடிமையாகி, மனிதன் தன் ஜீவசத்தை விரயம் செய்வது மகாபாவம் என்றும், அது தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் தற்கொல் முயற்சிக்குச் சமம் என்றும், அது ஒரு சமுதாயத் துரோகம் என்றும் தம்முடைய சத்திய சோதனையில் பலப் பல தருணங்களில் எச்சரிக்கை விடுத்திருக்கிருர் காந்தி அடிகள்.