பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

ஆன? பெண்ணு ?

கர்ப்பகாலத்துக்கு உரிய நாட்கள் 280 எ ன் று மருத்துவ விற்பன்னர்களால் கண்டு சொல்லப்பட்டிருக் கிறது. இவ்விதிக்குச் சற்றே- அதாவது ஓரிரு நாட்கள் முன்னதாகவோ அல்லது பின்பாகவோ பிரசவம் ஏற்பட்டு விடவும் கூ டு ம். ஏனென்ருல், கர்ப்பம் தரித்ததாளே கச்சிதமாகக் கணக்கிடுவது அசாத்தியமல்லவா ?

கர்ப்பகாலக் கணக்குப் பார்க்கும் விதம் இது:

கடைசியாக மாதவிலக்கு நின்ற தேதி மாசி பத்து என்ருல், அடுத்த மாசி பத்துக்கு ஓராண்டு ஆகிறது. மூன்று மாதம் கழித்தால், கார்த்திகை பத்து ஆகிறது. இத்துடன் பத்து நாட்களைக் கூட்டினல், கார்த்திகை 20 ஆகிறது. இதுவே பிரசவ நாள் ஆகும்.

இன்னொரு விதமாகவும் கணக்கிடப்படுகின்றது :

கடைசி மாதவிலக்கு ஜனவரி 1ம் தேதி ஏற்பட்டதாக வைத்துக் கொள்வோம். அத்தோடு 7 ஐச் சேர்த்தால் 8 ஆகிறது. பிரசவமாகும் மாதம் அக்டோபர். இம்மாதத்தின் 8ம் நாள்தான் பிரசவமாகக்கூடிய உத்தேச நாளாகிறது.

இந்தக் கர்ப்பகாலக் கணக்கை அட்டவணையிட்டுக் கொடுத்திருக்கிருர் இளவேனில். நூல் புதுமணத் தம்பதிகளுக்கு. மேலே சொல்லப்பட்டுள்ள விதத்தை, வைத்து, இவ்வட்டவணையைப் பயன்படுத்திக் கொள்ள, வேண்டும். - - -