பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

பேறுகாலப் பராமரிப்புகள்

புதிய விருந்தாளியை-அந்தப் புத்தம் புதிய இனிய ஆத்மாவை வரவேற்பதற்கான ஆயத்தங்களைத் தனக்குத் தானே செய்யக் கடமைப் பட்டவளாக ஆகிருள் தாய். தான் கருவுற்றிருக்கும் உண்மை நிலை நிர்ணயமானதும், அவள் அக்குடும்பத்தில் பெறும் தனி அந்தஸ்து துல்லிய மானதாகும். கொண்ட கணவன் மெய்யாகவே அவளைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவான்; பெற்ற தாய் தந்தையரும் அம்மகளைத் தனிப்பட்ட கவனிப்புடன் பேணுவதற்கு முனைவார்கள். வேண்டாத மாமியாரும் கூட, தன் மருமகள் சூலுற்றிருப்பதை அறியும்போது, "நல்ல மாமியாராக உருமாறி விடுவதை நாம் பார்க்கிருேம்:

இத்தகைய செல்வாக்குகளைச் சுவீகரித்துக் கொள்ள ஒரு வாய்ப்பை உண்டாக்கிக் கொடுக்கிறது. இத்தாய்மை எனும் பேறு.

கர்ப்பவதி எனும் புதிய பட்டத்தை அப்பகுதி அம்மணிகள் அவளுக்குச் சூட்டியதும், - r தன்னுடைய உடல்-உள்ளம் பராமரிப்பில் தக்க கருத்து கொள்ளவேண்டும். டாக்டர்கள் சொல்லும் அளவில் அவர்கள் குறிப்பிடும் மருத்துகளையும் உணவு. வகைகள் யும் உரிய காலத்தே உட்கொள்ளவேண்டும்.

கருப்பவதிகளுக்கு உணவுதான் மிகவும் ు சித்தா கும். எதிர்காலத் தாய் என்றழைக்கப்பு