பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

பதற்கும் தாயின் போஷாக்கு மிகுந்த உடல் ஊட்டம் தான் ஈடுகொடுக்க வேண்டும். உணவுப் பராமரிப்புக் கெனவே வளைகாப்பு போன்ற சடங்குகள் வைத்து, மகளைப் பெற்ருேர்கள் தங்களிடம் அழைத்துக் கொள்ளு வதும் இயல்பாகிறது.

சத்து மிக்க உணவு ஆண்மலட்டுத் தன்மையையும் பெண் மலட்டுத்தன்மையையும் நீக்கிவிடுவதாகவும் கூறப் படுகிறது. தாம்பத்தியப் பிணைப்பு ஏற்பட்டதிலிருந்து உணவு விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண் டியதன் அவசியமும் இதை ஒட்டியேதான் வலியுறுத்தப் பட்டு வருகிறது. -

உடல் வளத்துக்கும் கருவின் ஊட்டத்துக்கும் தேக புஷ்டிப்பொருள்கள் (Protiens), மாச்சத்து-சர்க்கரைப் 6. L T (5 Sir 35 gir (Carbohydrates), Qārqpril 1556ir (fats) உலோகச்சத்துப் பொருள்கள் (minerals) சுண்ணும்புச் சத்துப் பொருள்கள் (Calcium) உப்புகள் (salts), ஜீவசத் துக்கள் (Vitamins), நீர் (water போன்றன. அதனதன் விகி தாசார அளவில் அமைந்திருக்க வேண்டும். இத்தகைய பொருள்களால் தேகவலுவும் தேகத்துக்குத் தேவைப்படும் உஷ்ணமும் கிடைக்கும். - - . . .

கருவுற்ற நாளிலிருந்து பிரசவம் ஆகும் நாள்வரை மாமிசங்களை வெகுவாகக் குறைத்துக் கொள்வது சிறந்தது. மாமிசங்களில் உள்ளதைக் காட்டிலும் மரக்கறிகளிலும் முட்டை, பசும்பால் போன்றவற்றிலும் அதிக ஜீவசத்து இருக்கிறது. உடலைக் கெடுக்கும் விஷச் சத்துக்கள் மரக் கறிகளில் இல்லை. கர்ப்பிணிகளின் உடல் அதிகம் பெருத்து விடலாகாது. வெண்ணெய், நெய், எண்ணெய் போன்ற வற்றில் கொழுப்புச்சத்து அதிகம் கிடைக்கிறது. இவற்றை அளவுடன் சாப்பிட்டால், உடல் பருக்காது:

Gu–3 -