பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

வைடமின் ஏ-சத்துமிக்க உணவுவகைகள் கர்ப் பிணிகளுக்குப் பெரிதும் உபயோகமானவை. தக்காளி, அன்னசி, வெண்ணெய், முட்டை, காய் வகை, தேங் காய் முதலியவற்றில் ஏ-வைடமின் சத்து மிகுதி. கர்ப் பிணிகளுக்கும் கருப்ப சிசுக்களுக்கும் இவை பயன் தரும்:

வைடமின் ஈ-சத்து குறைந்தால்தான், அகாலப் பிரசவம், கருச்சிதைவு, மலட்டுத்தனம் எல்லாம் நிகழும். தேங்காய், கோதுமை, ஈரல், பச்சைக் கறிகாய்கள், பால், தாவர நெய் முதலியவைகளில் ஈ-வகை உயிரூட்டிகள் உள்ளன,

ஜீரண சக்தி, நரம்புக்கட்டு, தேகவளம் முதலியவை களுக்கு வைடமின் பி-சத்து அவசியம். பீன்ஸ், முட்டை, திராட்சை, காய்கறிகள் ஆகியவைகளில் பிசத்து உள்ளது. - - -

ரத்த ஓட்டம், பல் உறுதி, தேக பலம் ஆகியவை களுக்கு வைடமின் சி-வகை அவசியம்: பழரசம், தக்காளி, கீரை அன்னசி, திராட்சை, வெற்றிலை உபு யோகிக்க வேண்டும். பல், எலும்பு உறுதிக்கு வைடமின் டி-முக்கியம். மீன் எண்ணெய், வெண்ணை, பால், மீன்

பிரசவத்தை எதிர்நோக்கும் கர்ப்பிணிகளுக்கு இந்த வைட்டமின் பி-சி-டி-ஆகியவையும் துணைபுரியும். ஜீவசத்துக்களில் எதுவும் தள்ளுபடி கூடாது. ஒவ்வொரு வகைப்பலம் கூடினல் பிரசவிப்பதற்குத் தேவைப்படும் உடலின் முழு பலமும் உள்ளத்தின் பூரணதைரியமும் ஏற்படும். எலுமிச்சை, தேன் முதலியவைகளே அடிக்கடி பயன்படுத்தினுல் பயன் உண்டு!