பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

போதுமான அளவு நீர் அருந்தலாம். 6, 7 குவளை தண்ணீர் தாராளமாகக் குடிக்கலாம். மேலும் அவர்கட்குத் தண்ணிர் இயல்பாகவே அதிகமாகத் தேவைப்படும்.

2. உடை ,

நோயனுக்கள் கர்ப்பிணிகளை அண்டலாகாது. ஆகவே அவர்களின் குடியிருப்பும் உடையும் சுத்தமாக இருத்தல் இன்றியமையாத தாகும். உடை மெல்லிய தாக இருப்பது சிலாக்கியம். காற்ருேட்டமும் சூரிய வெளிச்சமும் அதல்ை உடம்பில் பரவும். வயிற்றைச் சுற்றிப்புடவையை இறுக்கமாகத் தரித்துக் கொள்வதும் இறுக்கமான நவீன சோளி வகைகளே அணிவதும் தவறு. அவ்வாறு இறுக்கமாகக் கட்டினல், கருவின் வளர்ச்சி யைத் தடுப்பதுடன், பிரசவத்தை இலகுவாக்கவல்ல சுருங்கிவிரியும் தன்மையுடைய பெல்விசு (Pelvis) எனும் இடுப்பெலும்பு கோளாறு அடையும். ஏனெனில், இந்த இடுப்பெலும்புக் கூட்டில்தானே கருப்பை உளது!... ரத்தத்தைச் சாப்பிடுவதாகக் கூறப்படும் நைலான் வகைத் துணிகளை அணிவதைக் கட்டாயம் தவிர்க்கவேண்டும். கைபிடித் துண்டுகளைக் கூடுதலாக வைத்துக் கொண்டு வேர்வையைத் துடைத்தும் உடனுக்குடன் அவற்றை வெந்நீரில் நனைத்துப் பிழிந்து உலர்த்தியும், அப்பால் மீண்டும் அவற்றை உபயோகிக்க வேண்டும். வெள்ளைச் சேல்களை உபயோகிப்பது நல்லது. ஆனல் சுமங்கலிகள் வெள்கர்யை உபயோகிக்கத் தயங்குவார்கள். அப்படி