பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

பணக்காரர்கள் கார்களிலே உலாவ:ச் செல்வதுண்டே, அப்படியல்ல; த ட ந் து செல்லவேண்டும். இம்மாதிரி உலவுதல் (walking) உறுப்புக்களுக்கு நல்லது. -

இவை தவிர, உடற்பயிற்சியும் நன்மை கொடுக்கும். அதன் காரணமாக, சிசுவின் உடல் வளமும் செம்மைப் பட முடியும். கர்ப்பஸ்திரீகளுக்குப் பிராணவாயு? அவசியம். உள்ளுறுப்புக்களின் இயக்கத்துக்கு பிராண வாயு சுவாசித்தல் நலம் தரும். நல்ல காற்று துரையீரல் களைச் சுத்தப்படுத்தி வலுவூட்டும். உடற்பயிற்சிகள் பற்றிய வரைபடங்கள் இப்போது எல்லா ஆஸ்பத்திரி களிலும் இருக்கின்றன.

(அ) உடம்பை நாற்புறமும் வளைத்தல் வேண்டும்! இடுப்பின்மீது கைகளை வைத்துக்கொண்டு முன்னுக்கு வளைந்து, பின்னுக்கு நிமிர்ந்து, வலதுபக்கமாகவும் இடது பக்கமாகவும் சா ய் ந் து நிமிரவேண்டும். இம்மாதிரி பன்னிரண்டு தரமாவது பயிலலாம்.

(ஆ) ஒற்றைக்காலில் நின்று கொண்டு, மற்ருெரு முழங்காலை மடித்தவாறு மேலே தூக்கி, மார்பைத் தொட வேண்டும். இப்படியே மாறிமாறி ஒவ்வொரு முழங்காலா லும் .ெ ந ஞ் ைச த் தொடவேண்டும். இயன்றமட்டில் உடம்பை கஷ்டப்படுத்திக் கொள்ளாத வகையில், செய்ய வேண்டும். -

(இ) வயிற்றை நன்கு உள்ளுக்குள்ளாக எக்கி, அதா வது, வயிற்றின் தசைநார்களை உள்ளுக்குள் இழுத்து, சற்றுநேரம் கழித்துத் தளரவிட்டு இம்மாதிரியும் பயிலலாம். (ஈ) கால்களைச் ச ற் று அகலவைத்துக் கொண்டு நின்று, இரண்டு கைகளையும் சேர்த்துத் தலைக்குமேலாக துக் கி. க் கைகளிரண்டையும் கால்களுக்கிடையில் துழைந்து போகும்படி, கீழே குனிந்து நிமிரவேண்டும்.