பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

10. மார்பகச் சுத்தம்

நவீன விஞ்ஞானமும் மருத்துவ ஆலோசனையும் கர்ப்பவதிகளின் மார்பகச் சுத்தி பற்றி வெகுவான கவனம் .ெ கா ஸ் கி ன் ற ன. பிறக்கப் பே கு ம் சிசுவுக்குச் சம்ரட்சணைக்கு உதவும் வண்ணம், கருப்பவதிகளின் மார்பகங்கள் ஆருவது மாதத்திலிருந்து சுத்தம் செய்யப் பட வேண்டும். பால்சப்புவதற்கு உரிய நி லே ைய குழந்தைக்கென இப்போதிருந்தே அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அபிப்பிராயம். மூன்ருவது, அல்லது நான்காவது மாதத்தில் மார்பகங் களையும் முலைக்காம்புகளையும் லேடி டாக்டர்களோ மருத் துவச்சிகளோ சோதித்துப் பார்த்து, அதன்பின் பால் சுரப்பதற்கான வழிகளையும் சொல்வார்கள்.

11. மனமரபுகள்

கர்ப்பிணிகள் தாம் கருத்தரித்த நாளிலிருந்து பிரசவம் ஆகும் வரை, இயன்ற அளவுக்கு மனத் துயரம் சிறிதும் இல்லாமல், அவர்களின் மனநிலை சந்துஷ்டியுடனும் மனக் குதுகலத்துடனும் இருப்பதற்கு அக்கறை கொள்ள வேண்டும். மணமலர்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது. உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் இதம் தரும்.

தாயின் மறுபிறவியாக-தாயின் பிரதிபிம்பமாகவே குழந்தை பிறக்கிறது. சிசு கர்ப்பத்தில் வாசம் செய்யும் காலத்தில், தாய் மகிழ்வுடன் இருப்பதை அனுசரித்துத் தான் அச்சிசுவும் மன மகிழ்வுடன் இருக்கும். ஆகவே, பயம், சோகம், துன்பம் போன்ற உணர்வுகள் கருச்சிதை வுக்கு வழி கோலலாம். பேய் பிசாசுகளைப் பற்றிய செய்தி களையும் அறியாதிருப்பது நல்லது. எவ்விதத்திலும் சிறிதளவுகூட மன அதிர்ச்சி கூடாது.