பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

அவளின் மனத்தளவில்தான் அவளது கர்ப்பம் மனப் பக்குவம் எய்துவதற்கு அடித்தளம் அமைக்கப்படும். மனக் குதூகலத்துடன் பேசிச்சிரித்துக் கொண்டும், இனிய நல்ல நூல்களைப் படித்துக் கொண்டும், ஒய்வு வேளைகளில் நல்ல பாடல்களைக் கேட்டுக் கொண்டும் இருக்க வேண்டும். குழந்தைக்கு வேண்டிய சட்டை, குல்லாய் முதலான வற்றைப் பின்னுவதிலும் ஈடுபட வேண்டும். அவர்களின் கனவுகள் ரம்யமான முறையில் வளர அம்மாதிரிச் செயல் கள் உதவும்.

சில்லறைச் சண்டை, கோபதாபம் கூடாது. சாவு வீடுகளைத் தவிர்க்க வேண்டும். .

குழந்தைக்கும் தாய்க்கும் உள்ள தொடர்பு மனே தத்துவ அடிப்படையில் அமைந்திருப்பதால் கர்ப்பிணிகள் இம்மாதிரி விஷயங்களே அல்பம் என்று அசட்டை செய்து விடலாது! o

12. உடலுறவு

கருவுற்ற காலத்தில் தாம்பத்தியப் புணர்ச்சி கூடாது என்று சில உடற்கூறு வல்லுனர்கள் கூறுகிருர்கள். இக் காலத்தில் அளவோடு உடலுறவு கொள்ளலாம் என்று அபிப்பிராயம் கொண்டிருப்போரும் உண்டு. ஏனெனில் கருவுற்ற பெண்களின் ஆசைகளை நிராகரிக்கலாகாது என்பது உட்கருத்தாகும். மனைவியின் விருப்பப்படி, அளவோடு புணர்ச்சி கொள்ளுவதில் கண்ணும் கருத்தும் கொள்ளுவதில் கணவன் அ க் க ைற கொண்டிலங்க வேண்டும். கணவனின் மோக வெறிக்கு கர்ப்பிணி பலி யாகக் கூடாது. அவ்வாறு உண்டாகும்போது கருச் சிதைவு ஏற்படக் கூடும். சாதாரணமாக, கரு உருவாகி விட்ட தன்மை ஸ்திரமானபின்தான் தாம்பத்திய உறவு (Sexual intercourse) Qas reit or Gaisoróth. Sri-Litsugi