பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}

குழந்தையும் தெய்வமும்

'அம்மா! நான் எங்கிருந்து வந்தேன்? நீ என்ஐன எங்கே கண்டு பிடித்தாய் ?- என்று தாயைப் பார்த்துக் கேட்டது குழந்தை.

தாய் கரைகாணு ஆர்வத்துடன் குழந் தையை இழுத்து மார்புடன் அனைத்துக் கொண்டு, அழுகையும் சிரிப்புமாகப் பதிலளித் தாள் :

  • " என் செல்வமே ! என் இதயத்தில்அதன் ஆசையாகவே நீ மறைந்திருந்தாய் !--

‘' எங்கள் குலதெய்வத்துடன் நீயும் கோயில் கொண்டிருந்தாய். அதைத் தொழுத போது, உன்னையுமன்ருே நான் வழிபட்டேன்!

  • என்னுடைய கோரிக்கைகளிலும், என் னுடைய ஆசைகளிலும் என்னுடைய உயிரி லும், ஏன், என்னுடைய தாயின் உயிரிலுங் கூட நீ இருந்தாய் !

“நம் இல்லத்தைக் காக்கும் அழிவில்லாச் சக்தி சொரூபத்தின் மடியிலே, நீ தலைமுறை தலைமுறையாகத் தாலாட் - ப் பட்டிருக் கின்ருய் ! - -- " ...: