பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

புண்ணியக் கடமையை வயிற்றில் சுமந்து தவம் இருக்கும் கர்ப்பவதி, தாய்’ எனும் நன்மதிப்பைப் பெறுவதற்குள் அவள் முன்னே விரிந்து கிடக்கும் அந்தப் பத்துமாதங் களும் அவளுக்குப் பத்துக் கண்டங்களாக-பத்து யுகங் களாக-பத்துக் கனவுகளாகவே தோன்றும், கர்ப்பம் தரித்து அந்தப் பொன்னை மகிமைமிக்க கணத்தி லிருந்து அவளுள் சுமை வளர வளர, அவளது சுமையின் கனவும்-சுமைபற்றிய இன்பத் தொல்லையின் இனிய நற் கனவும் விரிந்து கொண்டே செல்கிறது.

இந்தப் பத்துமாதங்களிலே கர்ப்பிணிகளின் நிலை என்னவென்பதைக் கவனிக்க வேண்டும்:

i

1. முதல்மாதம் :

பெண்ணின் சினைமுட்டையோடு ஆணின் ஜீவ அணு கலந்து கர்ப்பம் தரித்துவிடும் போது, அக்கர்ப்பம் உருவமற்ற தசைப்பிண்டமாகவே தொடக்கத்தில் அமை கிறது. இதன் அளவு ஓர் அங்குலத்தில் நூற்றிருபத்தைந் தில் ஒன்றுதான். எனவும் மருத்துவ அறிஞர்கள் சொல்லி ஆயிருக்கிருர்கள். கருவளரும் சத்தை ஊட்ட புதிய ரத்தக் குழாய்கள் உண்டாகின்றன. இத்தகைய கட்டத்தில், இத்தசைப் பிண்டத்தை வயிற்றில் சுமக்கத் தொடங்கும் கர்ப்பவதி இச்சுமையை எ டு த் த எடுப்பில் அறிவது அசாத்தியமே. ஆலுைம், மாதவிலக்கு நின்று, உடல் ஆரோக்கியமும் அதற்கு அனுசரணையாய் அமைந்து, காப்பம் உண்டாகியிருப்பதற்கான அ டையாள ம் ஊர்ஜிதமான சமயத்தில், கர்ப்பவதிகள் தங்களையும் அறியாத விதத்தில் தங்களது வ யி ற் றி ல் கரு உரு வாவதை-உருவாகிக் கொண்டிருப்பதை-உ ரு வ கி ஆயிருப்பதை எப்படியோ அறிந்து கொண்டுவிடமுடியும். இவ்வற்புதத்தை உணர்வதற்கு அவர்களுடைய ஆன்மா