பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

"சொர்க்கத்தின் முழு முதற் செல்வமும் அருணுேதயத்தோடு பிறந்த இரட்டைப் பிறவி யுமான நீ, உலக உயிர் ஒடையோடு மிதந்து வந்து, என் இதயத்திலே கரை ேசர் ந் து விட்டாய் !...”

-தாகூர்

சிருஷ்டிப்புதிருக்கு ஒரு தத்துவமாக விளங்குகிருள் பெண். அவளது பெண்மையோ படைப்புத் தத்துவத் துக்கு ஒரு விளையாட்டாக அமைகிறது. ஆனல் பெண் தாய்மைப்பேறு அ ைட யு ம் பொழுதுதான், அவள் சிருஷ்டிக்கே ஒரு ஜீவன் ஆகின்ருள்; அதன் மூலம் படைப்பின் ரகசியம் அம்பலமாகின்றது; சிருஷ்டியின் புதிருக்கும் ஒரு விளக்கம் கிடைத்து விடுகின்றது !

ஆம்; குழந்தைதான் படைப்புச் சக்தியின் முதல் ஆத்மா. அ. ந்த ஆத்மாவை அருளுகிற-அருளவல்ல அந்தத் தாய்தான் படைப்பிற்கு ஒரு விதி-ஒரு தவம்.

உண்மைதான் ; தாய் தவம் இரு ந் து, நோன்பு இயற்றி, கனவு கண்டு, அன்பு வளர்த்துப் பெற்ற மதலே உலகின் ஜனத்தொகையில் ஓர் அங்கம் வ கி. க் க த் தொடங்குகிறது; நாட்டு நடப்பில் அதற்கும் ஒரு பங்கு கிட்டக் காத்திருக்கின்றது! வாழ்வியல் கதைக்கு அதுவே விதியாகவும் இயங்கத் தொடங்கி விடுகின்றது !

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தே!-- என்று சொல்லப்படுவது உண்டல்லவா :-இம்மொழி நமது தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒரு விளக்கமாகும். கொண் டாடப்படும் போதுதான் குழந்தையும் தெய்வமும் ஏற்றம்