பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. ஆரும் மாதம்

இப்பொழுது குழந்தை அதனுடைய நீர் நிரம்பிய

தொட்டிலில் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருக்

கிறது. -

கர்ப்புக்குழவி 12-13 அங்குல நீளம் இருக்கும். கருப்பை தாயின் தொப்புள் வரையில் உயர்ந்திருக்கும். தலே எலும்புகள் வளர்ந்துவரும். எடை இரண்டு பவுண்ட் இருக்கும். கருவிலுள்ள குழந்தையின் உடற் கூட்டின் எலும்புகள் எக்ஸ்ரே (X-ray) படத்தின் வாயிலாக அறியப் பட முடியும். Y. -

முலைகளில் அதிகப்படியான கறுமை தெரியும்.

மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண் டும். வைட்டமின் வகைச்சத்துக்கள் நிரம்பிய ஆகாரங் களேயே அளவுடன் உட்கொள்ள வேண்டும். சம அளவு ஆகாரம் (balanced diet) தான் உகந்தது. குழந்தையின் எலும்பு, தசைநார் வளர்ச்சி ஏற்ற வகையில் ஊட்டம் இருந் தாகவேண்டும். இப்போது வைடமின் ஏ-வைடமின் டி-இவ்விரு சத்துள்ள பொருள்களும் மிகவும் பயன் தரும். பால், வெண்ணெய், பழரசம், முட்டை, எலும்பு சூப், மீன், தவிடுபோக்காத அரிசி, கோதுமை இவைகளைப் புசிப்பது சிலாக்கியம். பாதாம் பருப்பு, ஆப்பிள், சாத்துக் குடிப்பழம், எலுமிச்சை, தேன்-நல்லது.

கருப்பையின் வளர்ச்சியை ஒட்டி, அதற்கேற்ப உடைகளைத்தளர்த்திக் கட்டிக் கொள்ள வேண்டும். ஆளுவது மாதத்திலிருந்து பிரசவமாகும் நாள்வரை அணிந்து கொள்ளவென்று கொஞ்சம் தளர்த்தியான சோளிகளை உபயோகிப்பது உகந்தது ஆகும்.

5 سستقBt)