பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

கர்ப்பகால நோய்களும் சிகிச்சைகளும்!

னேம் ஒத்த ஆனும் பெண்ணும் தம்பதியாகி, அவர்கள் இருவரும் நல்ல ஆரோக்கியமும் பெற்றவர் களாக இருந்து விட்டால், அவர்களது தாம்பத்தியம் சீரும் சிறப்பும் பெற்றுத் திகழுவதுடன், உரிய காலத்திலேயே அவர்களுக்குச் சந்தான பாக்கியமும் கிட்டிவிடும்.

இதற்கு அனுசரணையில்லாத வகையில் தம்பதியின் இணை அமைந்தால், அவர் க ள து மண வாழ்க்கை அவ்வளவு சுகமாக அமைய முடியாது. தம்பதியரில் கணவன் அல்லது மனேவியரில் யார் உடல் நலக் குறைவு டன் இருந்தாலும் அது அவர்களது மணவாழ்க்கையை எப்படியோ ஒருவகையில் பாதிக்கவே செய்யும். அதிலும் முக்கியமாக, பெண் நோயாளியாக இருந்து, அவள் கருத்தரித்தாலோ, அல்லது பெண் தேக ஆரோக்கியத் துடன் இருந்து புருஷன் சீக்காளியாக இருந்து, அவர்களது திருமண வாழ்வுக்குப் பின்னே அப்பெண் கருத்தரித் தாலோ, அக்கருப்பவதியைச் சாடும் கர்ப்பகால வியாதிகள், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நோய்களைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் சீருடன் இருந்துவந்தால்: கர்ப்பிணிகளுக்கு வரும் வியாதிகள் அவ்வளவு தீவிரமாக இருக்காது என்ற நிலையைத்தவிர, கர்ப்ப காலத்திய