பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"g

வைட்டமின் சத்து ஆகாரங்களும் உலோகச் சத்து களும் உணவில் நித்த தித்தம் போதிய அளவுக்குப் புழங்கவேண்டும்.

பேணுதற்குரிய ஆரோக்கிய உடல் நலம் பெறு: வாய்க்காத கர்ப்பிணிகள் ஆயாசம் தரத்தக்க அலுவல் களேச் செய்வது தவறு. உழைப்பும் பயிற்சியும் சத்துள்ள வர்களுக்குத்தான். கர்ப்பிணிகள் சம்போகத்துறையிலும் நாட்டம் கொள்ளக்கூடாது. மலமும் நீரும் தாராளமாகப் பிரியவேண்டும்,

கைகால் வீக்கம், இதுல்ே, படபடப்பு, மூச்சு வாங்கு தல் மூச்சுத் திணறல் முதலியவை தொடர்ந்தால் உடனடி யாகச் சிகிச்சை பெறவேண்டும். இவ்வகை நோய் களுக்குத் தக்க உணவுப் பராமரிப்பும் ஓய்வும் பழரசமும் பயன்தரலாம். சத்து மிக்க பழவகைகளும் நல்லது. குளுகோஸ் பானமும் அவ்வப்போது ஹார்லிக்ஸ் அருந்து வதும் ஊட்டத்துக்கு உதவும். .

கைகால் (fக்கம்

சில கர்ப்பவதிகள் எட்டாவது மாதத்தில் காலடி எடுத்து வைக்கும் போதே, அவர்களின் கைகால் வீங்கி விடும். சிலருக்கு ஒன்பதாம் மாதம் வீங்கும். பெரும் பாலும் இவ்வியாதி கர்ப்பகால வியாதிசயாகவே மதிக்கப் படும். ஏனென்ருல், பிரசவம் ஆனவுடன் இந்நோய் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிடும். அதற்கு மேலும் கைகால் வீக்கம் இருந்தால், மருத்துவத்தை நாடுவதே விவேகம், -

மலம், நீர் தினலும் ஒழுங்காகக் கழியவேண்டும். இவை சரிவர நடக்காவிட்டால் கைகால் வீக்கம் அதிகரிக் கும். விட்டமின் சத்துமிக்க ஆகாரங்களையும், உஷ்ணப்