பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§:

இதுபற்றி அடிக்கடி மனத்தில் எண்ணுமல் இருப்பது விவேகமானதாகும். ஏனெனில் கர்ப்பிணிகளின் மனம் தெளிவுடனும் குதூகலத்துடனும் இருப்பது உகந்தது. சத்துமிக்க ஆகாரங்கள், பழங்களை அளவுடன் சாப்பிட வேண்டும். தேவைப் படுவதற்குத் தக்கபடி ஆகாரங்களை மாற்றிக் கொடுக்க வேண்டும். எலுமிச்சம்பழம் தினமும் பயன் படுத்தப் படவேண்டும். இக்காலத்தே கர்ப்பிணி விரும்புகிருள் என்பதற்காக உடலுக்கு ஒவ்வாதவற்றை எக்காரணத்தைக் .ெ க | ண் டு ம் சாப்பிடக் கூடாது. வெண்ணெய் சாப்பிடலாம். பெரும்பாலும் இந்நோய் மூன்ரும் மாதம் முடிவடைவதற்குள் போய்விடும். ஒய்வும் உறக்கமும் வேண்டும். நடை, உலாவுதல் மாறுதல் தரும்.

அஜீரணம்-மலச்சிக்கல்

உண்ணும் உணவுகளினின்றுதான் தாயின் ரத்த வோட்டம் ஏற்படுகிறது. அந்த ரத்தத்தினின்றுதான் கருப் பத்திலுள்ள சிசு தனக்குத் தேவைப்படுகிற ரத்தத்தை சுவீகரித்துக் கொள்ளும். ஆகவே, உண்ணும் உணவு ஜீரணமாவது முக்கியம், உணவு செரிமானம் ஆகாமல் இருந்தால், ரத்த ஓட்டம் பாதிக்கப் படாதா?

அளவுடன் உண்ணும் உணவு நன்கு ஜீரணமாகி தத்தாைகமாறி, ரத்தத்துடன் கலப்பதற்குரிய அலுவல்களை உடலுறுப்புகள் செய்ய வேண்டும். நல்ல உழைப்பு இருந்தால் இவ்வேலை தடைப்படாது. வயிறு யாதொரு நோயுமின்றி இயங்க வேண்டும். கர்ப்பிணிகள் கடின தோர்த்தங்களை நீக்கவேண்டும். ஜீரணத்துக்குத் தேவைப் படும் இடைவேளைவிட்டுச் சாப்பிட வேண்டும். பகலில் 12 மணிக்கும் இராச் சாப்பாட்டை விரும்பில்ை இரவு 6 நம் வைத்துக் கொள்ளலாம். இரவு படுப்பதற்கு