பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

புளிப்பு ஏப்பம்-நெஞ்சு எரிச்சல்

அஜீரணத்தைத் தொடரும் உபவியாதிகளில் புளிப்பு ஏப்பம் வரும். .ே ச டி ய ம் பை கார்பனேட்டை” (Sodium Bicorbonate) ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதைச் சிறிதளவு தண்ணிரில் கலக்கிக் குடிக்கலாம். அதிகப் படியான சத்துள்ளதும் சீக்கிரம் செரிமானம் ஆக முடியாததும் ஆன ஆகாரங்களை உட்கொள்ளுவதை நிறுத்தினுல் புளியேப்பம் நின்றுவிடும். மிக எளிய மருந் தாக, கொஞ்சம் தண்ணிரில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி, அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து கலக்கிக் குடித்து விடலாமே ! -

வயிற்றின் மேல் பகுதியில் எரிவது போன்றதோர் உணர்வு, வயிற்றிடை கூடுதலான ஆஸிட்கள் (acids) இருப்பதால் ஏற்படும். அஜீரணக் குறைபாடுகளில் இது வும் ஒன்று. இதைத் தகுந்த உணவு முறையால் நிவர்த்தி செய்யலாம். கடினமான பதார்த்தங்களையும் ரொம்பவும் சத்துமிக்க பொருள்களையும் குறைக்க வேண்டும்.

நெஞ்செரிவும் புளிப்பு ஏப்பமும் ஒன்ருேடொன்று பிணைந்தால், புளிப்பு ஏப்பத்திற்கான வைத்தியமே இதற் கும் போதும். . . . .

ஆயிற்றுப் பொறுமல்

வயிற்றில் வாயுக் கோளாறுகள் (gastroubles) கூடி வயிறு உப்புசமாயிருந்தால், வயிற்றுப்பொறுமல் ஏற்படும். வளர்ந்த கர்ப்பப்பை குடலை அமுக்குவதால் இது ஏற்படும். வாயு பதார்த்தங்களைக் கூடிய வரையில் ஒதுக்கியாக வேண்டும். புளிப்பு ஏப்பத்திற்குச் சாப்பிடுவது போல சோடியம் பைகார்பனேட் பானம் அருந்தினல் சரியாகி

விடும்.