பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

கொடியையும் நஞ்சையும் வெளியேற்றுவதில் மருத்துவம் படித்தவர்கள் கவனமாக இருப்பார்கள். கிராமங்களில் குழந்தையை வெளியே எடுக்கும் மருத்துவச்சிகள் நஞ்சுக் கொடியை புரியாமலோ அவசரப்பட்டோ இழுத்து, தாய்க்கும் சேய்க்கும் கஷ்டம் உண்டு பண்ணுவதும் தீய முடிவை உண்டாக்குவதும் உண்டு.

கர்ப்பிணிகள், நஞ்சுக்கொடி புரண்டு பி ன் னி க் கொள்வதால் பிரசவத்தில் மரண அவஸ்தைப் படுவ துண்டு. அவர்கள் சாதாரணமாக ஒருக்களித்துத் தான் படுக்கவேண்டும். மல்லாந்தோ அல்லது குப்புறவோ படுப்பது அபாயம். ஒரு வசம் மாற்றி இன்னொரு வசத்தில் படுக்குமுன் எழுந்து உட்க்ார்ந்த பின்னர்தான் வசம் மாற்றிப் படுக்கவேண்டும். இதன் பலகை, குழந்தையின் தொப்புள் கொடி பின்னிக் கொள்ளமாட்டாது. நஞ்சுக் கொடி சாதாரணமாக 20 அங்குலம் முதல் 22 அங்குலம் வரை நீளமிருப்பதால், பின்னிப் பிணைந்து கொள்ள வாய்ப்பு உண்டு. கடைசி மாதத்தில் குழந்தை தன் தலையை அடியில் பதித்து சதா அலைந்து கொண்டுதான் இருக்கிறது. ஆகவே, இக்கொடி பின்னிக்கொள்ள வழி ஏற்படாமல் இருப்பதற்கு, தாய்மார்கள் படுத்துக்கொள்ளும் நிலைகளில் கவனம் பதிக்கவேண்டும்.

நஞ்சும் நஞ்சுக் கொடியும் துளியளவு தங்கி இருந்தா லும், பிறகு அது பிரசவத்துக்கு அடுத்த மாதவிலக்கின் போது கழியாவிட்டால், பின்னர் அது மறு பிரசவ சமயத் தில் தொல்லை கொடுக்கும். தேர்ந்த லேடி டாக்டர்கள் இவ்விஷயத்தை கவனித்துக் கொள்வார்கள்.

கருப்ப இசிவு

சில கர்ப்பிணிகளுக்கு பிரசவகாலம் நெரு தருணங்களில் ஏற்படும் இந்தக் கர்ப்பிணி இசிவு