பக்கம்:பொங்கற்பரிசு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புத்தொளி எங்கும்!


கொடும்பனி ஊதை தூறல்
குளிரெலாம் ஒடுக்கி நின்று
தொடுவானில் ஒளியின் செல்வன்
தோன்றினான்; வாழ்க! பொங்கல்
இடுமோசை இல்லந் தோறும்
எழுந்தது; நன்செய் புன்செய்
நெடுவானம் காடு மேடு
நீர்நிலை எங்கும் பொன்னாம்!1


கொத்தெலாம் பூச்சி ரிப்பு!
கொடியெலாம் வண்டின் பாட்டாம் !
புத்தொளி எங்கும்; தோப்புப்
புதரெலாம் விளைவின் தேக்கம்!
எத்திசை எதிர்ப்பட் டாலும்
புதுப்புனல்; பசுமைக் காடு!
புத்தமிழ் தளிக்கும் இன்பப்
பொற்கதிர் வாழ்த்தாய் தம்பி!2


முதிர்கழை கடிக்கும் வீட்டு
முதிராத கரும்புப் பிள்ளை!
புதுப்புனல் அரிசி ஆப்பால்
பொடியுடன் வெல்லம் சேர்த்துக்
கொதித்திடும் பொங்கல்; வாழ்க!
ஒவ்வொரு குடிசை யுள்ளும்
புதுப்பொங்கல்; மகிழ்ச்சிப் பொங்கல்;
தமிழ்ப்பொங்கல்! வாழ்க! வாழ்க!3

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/12&oldid=1148199" இலிருந்து மீள்விக்கப்பட்டது