பக்கம்:பொங்கற்பரிசு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பொன்னை வாழ்த்துவோம்!

யலெங்கும் கதிர்சாய,
மரமெங்கும் குலைசாய
வற்றாப் பொய்கை
அயலெங்கும் நீர்சாயக்,
கயல்சாயக், குலைசாய,
அழகுக் கூந்தற்
பெயல்சாய, இடைசாய.
நடைசாய, விழிசாயப்,
பேச்சும் சாய
மயலூட்டி வருமூசைப்
பைம்பொன்னை வாயார
வாழ்த்து வோமே!

1


கீழ்த்திசையில் அலையொதுங்கக்,
கிளைசெடியிற் பூவொதுங்கக்,
கிள்ளை கொஞ்ச
மேத்திசையில் இருளொதங்க,
விரிவானிற் குளிரொதுங்க,
வெய்ய வாடை
நாத்திசையிற் போயொதுங்க,
நறுமலரில் வண்டொதுங்க,
நாட்டுப் பெண்கள்
வாழ்த்திசையில் நாணுெதுங்க
வருமூசைப் பைம்பொன்னை
வாழ்த்து வோமே !

2

8
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/16&oldid=1148956" இலிருந்து மீள்விக்கப்பட்டது