பக்கம்:பொங்கற்பரிசு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலைக்காட்டுச் சாரலிலே
வற்றாத தேன்பெருக்கி,
மலையின் சாரல்
இலைக்காட்டுத் தோப்பினிலே
பூமலர்த்தி, எழில்பெருக்கி,
இன்ப வாழைக்
குலைக்காட்டுக் கொல்லையிலே
குயில்பாடக் குரல்கொடுத்துச்,
செம்மண் பாலை
அலைக்காட்டுப் பெருங்கடல்மேல்
அலர்ந்ததடா புதுப்பரிதி
வாழ்க! வாழ்க! 3


நீர்முழக்கக், காமுழக்க,
நெல்லறுக்கும் வயல்முழக்க,
நீண்ட மாட
ஊர்முழக்க, மாமுழக்க,
மலைமுழக்க, உலைமுமுக்க,
ஊரில் உள்ள
ஏர்முழக்கப், பறைமுழக்க,
இசைமுழக்கத், தமிழ்முழக்க
எழுந்து வானில் .
பார்முழக்கத் தொடுவானில்
தை முதல்நாள் இதோவந்தான் !
பரிதி வாழ்க ! 4

11
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/19&oldid=1148973" இலிருந்து மீள்விக்கப்பட்டது