பக்கம்:பொங்கற்பரிசு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கரும்புகள் ஒடித்துக் கன்றுகள் அடித்துக்
களித்திடும் சிறுவரின் கண்ணில்
பெருகிடும் இன்பம்! பொங்கலோ பொங்கல்! பிறர்நிலை கூறிடப் போமோ? 3


அலைகடல் தோய்ந்த இருட்பகை ஓட்டி
அழகுவான் எழுந்தது பரிதி !
இலையடர் புன்னை தாழையும் தெங்கும்
இடிகரைப் பெருமணல் மேடும்
வலையடர் முன்றில் சிறுகுடி நெய்தல்
மங்கையர் நீள்விழி எங்கும்
விலையிட வொண்ணா எழுச்சியின் கூத்தாம் ! வெளியெலாம் பொங்கலின் வாழ்த்தே ! 4

14
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/22&oldid=1147620" இலிருந்து மீள்விக்கப்பட்டது