பக்கம்:பொங்கற்பரிசு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உழத்தி : -
  குட்டையும் பூத்தென்ன? குரலெங்கும் கேட்டென்ன?
  குந்தக் குடிசையுண்டோ மச்சான் : -நாம் குடிசெய
   இடமுண்டோ மச்சான்?


உழவன் :
  நன்செய் விளைந்தது! புன்செய் விளைந்தது!
  நாம்தமிழ்ப் பொங்கலைக் கண்டோம்! - பெண்ணே !
  நாம்தமிழ்ப் பொங்கலே உண்டோம்!


உழத்தி:
 நன்செய் விளைந்தென்ன? புன்செய் விளைந்தென்ன?
 நாமென்றும் உழைப்பவர் தாமே ? -விளைவை
 நம்மாண்டை அறுப்பவர் தாமே !


உழவன் :
  ஆண்டவன் படைப்படி ! அதற்கென்ன செய்வது
  அழுதாலும் தீராதே கண்ணே -நித்தம்
  அழுதாலும் தீராதே கண்ணே !


உழத்தி: -
  ஆண்டவன் படைப்பல்ல! 'கீண்டவன் படைப்பல்ல
  ஆகாதார் படைப்பது மச்சான்! - முனைந்தால் !
  போகா திருக்குமோ மச்சான் !

18
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/26&oldid=1148486" இலிருந்து மீள்விக்கப்பட்டது