பக்கம்:பொங்கற்பரிசு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவன்: தென்னவர் தைப்பொங்
                     முன்னர் நாம் வாழ்த்துவோம்!
                     கன்னற் சுவைகண்ட பின்னே- வாய்க்
                     காலிடை ஆடுவோம் கண்ணே!. 6


அவள்: மாப்பிள்ளை மாருண்ண
                     மாங்குயில் கூவுது!
                     தோப்புப் பழுத்ததே அத்தான்! கொய்யாத்
                     தோப்புப் பழுத்ததே அத்தான்! 7


அவன்: கையொடு கைகோத்துத்
                     தைப்பொங்கல் வாழ்த்துவோம்!
                     நெய்ப்பொங்கல் உண்டபின் பெண்ணே!-நாம்
                     கொய்யாப் பழமுண்போம் கண்ணே! 8

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/29&oldid=1146516" இலிருந்து மீள்விக்கப்பட்டது