பக்கம்:பொங்கற்பரிசு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இல்லை இடர்!

ன்பம் பொலிக! இடர்நலிக!நம்வாழ்வில்
அன்பு பொலிக! அறம்மலிக!-துன்பமெல்லாம்
நீங்கிற்று! வாழ்வு பெருகிற்று! செங்கதிரோன்
ஈங்கெழுந்தான்! இல்லை! இடர்! 1


இருள்திரையை நீக்கி எழுந்தான் பரிதி!
இருள்மனத்தில் நீக்கமுன் னேற்றம்-பொருளைப்
பொதுசெய் திராவிடனே! பொங்கல்நன் னாளில்
இதுவன்றோ உன்கடமை யாம்! 2



நிலமடந்தை காண வந்தான்!


பொற்றுகளை வான்சிந்தப் புள்ளினங்கள் பாடப்
புதராடிக் கிளைதாவித் தவழ்ந்துவரும் தென்றல்
நெற்கழனி இடைபூத்த செங்கரும்பு வாழை
நின்றுவர வேற்பளிக்கும்;இசைமீட்டும் வண்டு;
பொற்புடைய புதுப்பெண்ணின் புன்முறுவல் போலப்
பூத்திருக்கும் நீரோடை; முழவார்க்கும் ஆறு; கற்பரசி நிலமடந்தை காணவந்தாள் வெய்யோன்!
கடுங்குளிரும் பனிப்புகையும் இனியில்லை! வாழி!

37
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/45&oldid=1147057" இலிருந்து மீள்விக்கப்பட்டது